படத்திற்காக உடல் எடையை குறைக்கும் விஜய் சேதுபதி.
நடிகர் விஜய் சேதுபதி, தளபதி விஜய் நடிப்பில் உருவாகும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, இவர் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற புதிய படத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா இணைந்துள்ளார். ஏற்கனவே 2015 ஆம் ஆண்டு வெளியான நானும் ரவுடிதான் என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இது குறித்து பேசிய விக்னேஷ் சிவன், ‘தலைப்பே எல்லாவற்றையும் விளக்கி விடும். இது ஒரு வேடிக்கையான ரொமான்டிக் திரைப்படமாக இருக்கும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த படத்தை இயக்க திட்டமிட்டிருந்தோம். இந்த படத்தின் கதையை சொல்லும் போது, விஜய் சேதுபதி, நாயன் மற்றும் சமந்தா ஆகியோருக்கு ஸ்கிரிப்ட் மிகவும் பிடித்திருந்தது என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், கதை எழுதப்பட்ட விதம் அவர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த படத்தின் கதாப்பாத்திரத்திற்க்காக, விஜய் சேதுபதி தனது எடையை குறைக்க உள்ளார் என்றும் கூறியுள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.66,000-ஐ கடந்தது நகை…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 – 2026 (பட்ஜெட் 2025)-ஐ…
சென்னை : ஜோ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக ரியோ நடிக்கும் படங்களின் மீது எதிர்பார்ப்புகள் எழுந்த சூழலில் அவர்…
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : பலரும் பார்த்து ரசித்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்ற நிலையில், அடுத்ததாக கிரிக்கெட் ரசிகர்களுடைய…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் இன்று தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கை 2025 - 2026 (பட்ஜெட் 2025)-ஐ…