பிரபல பாடகரான மலேசியா வாசுதேவனின் வாழ்க்கையை படமாக எடுக்கவுள்ளதாக நடிகர், பாடகர் மற்றும் அவரது மகனான யுகேந்திரன் கூறியதோடு, விஜய் சேதுபதியை அதில் நடிக்க வைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
விஜய் மற்றும் அஜித் இவர்களுக்கு அடுத்த இடத்தில் உயர்ந்து இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று என்ற தமிழ் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். மேலும் இவர் தெலுங்கில் ‘Uppena’ படத்தில் வில்லனாகவும் நடிக்கவுள்ளார் . மேலும் இவர் காத்து வாக்குல ரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம், இடம் பொருள் ஏவல், கடைசி விவசாயி, கா/பெ ரணாசிங்கம் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார். அதனையடுத்து இந்தியில் லால் சிங் சத்தா என்ற படத்திலும், மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியருடன் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார்.
இந்த நிலையில் தற்போது பிரபல பாடகரான மலேசியா வாசுதேவனின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க அவரது மகனும், நடிகர் மற்றும் பாடகருமான யுகேந்திரன் திட்டமிட்டு ள்ளதாகவும், அதில் விஜய் சேதுபதியை நடிக்க வைக்க விரும்புவ தாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் தனது தந்தையின் வாழ்க்கை குறித்தும், பாடி சினிமாவில் வருவதற்கு முன்பு ரப்பர் தோட்டத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் குறித்தும் ஒரு திரைப்படத்தை இயக்க விரும்புவதாகவும், அதற்கு விஜய் சேதுபதி தான் பொருத்தமாக இருப்பார் என்றும் கூறியுள்ளார்.
ஏனெனில் அவரால் மட்டுமே தந்தையான மலேசியா வாசுதேவனின் உடல்வாகுவை சரியாக வழங்க முடியும் என்று கூறியுள்ளார். விஜய் சேதுபதி ஏற்கனவே இலங்கை ஜாம்பவான முத்தையா முரளிதரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று படத்தில் கையெழுத்திட்டதும், அதை ஸ்ரீபதி ரங்கசாமி இயக்குவதாகவும், ராணா டக்குபதி தயாரிப்பதாகவும் தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…