மக்கள் என்னை நேசிக்கவில்லை.. ஜோ பைடன்தான் அடுத்த அதிபராக வருவார்- டிரம்ப்!
ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன், அமெரிக்காவின் அதிபராக இருக்கப் போகிறார் என குடியரசு கட்சி வேட்பாளராக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் கூறினார்.
அமெரிக்காவில் இந்தாண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், நியூயார்க் டைம்ஸ் செய்தி ஊடகம் மற்றும் செய்னா கல்லூரி இணைந்து ஒரு தேர்தல் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில் டிரம்புக்கு ஆதரவாக 36 சதவீத மக்களும், ஜோ பைடனுக்கு ஆதரவாக 50 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்து வந்தனர். இதில் அதிபர் டிரம்ப், ஜோ பைடனை விட 14 சதவீத வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவில் உள்ளார்.
இந்நிலையில் அந்நாட்டு தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் பேட்டியளித்த குடியரசு கட்சி வேட்பாளராக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப், மக்கள் சிலர் என்னை நேசிக்க மாட்டார்கள். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், அமெரிக்காவின் அதிபராக இருக்கப் போகிறார் என கூறினார். மேலும் பேசிய அவர், “ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன் பேசமாட்டார் எனவும், அவர் பேசினால் யாரும் அவரைக் கேட்கமாட்டார்கள் என கூறினார். அதுமட்டுமின்றி, அவர் பேசும்போதெல்லாம் இரண்டு வாக்கியங்களை ஒன்றாக வைக்க முடியாது எனவும் கூறினார்.