ஊழல் அரசியல்வாதியாக களமிறங்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி.!
- தளபதி-64 திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஊழல் செய்யும் அரசியல்வாதியாக நடித்து வருகிறார் என தகவல்.
- படத்தின் முதல் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளது.
நடிகர் விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது அவரது தளபதி-64 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை மாநகரம், கைதி புகழ்பெற்ற லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இவருக்கு கைதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று தந்தது. விஜய் நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக சென்னை, டெல்லி மற்றும் கர்நாடக என பல இடங்களில் நடைபெற்று வருகிறது. தற்போது தளபதி விஜய் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறையில் முன்னிட்டு வெளிநாடு சென்றுள்ளார்.
இந்த திரைப்படத்தில் ஒரு நடிகர் பட்டாளமே இருக்கிறது, அதில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார் சமீபத்தில் தான் அவரது கட்சி படமாக்கப்பட்டது. பின்பு படத்தின் தயாரிப்பாளர்களிடையே இருந்து ருசிகர தகவல் வந்தது. அதில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி விஜய்க்கு எதிராக ஊழல் செய்யும் அரசியல்வாதியாக நடித்து வருகிறார் என சொல்லப்படுகிறது. இதனால் ரசிகருகளிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது.
மேலும் படக்குழு முதல் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு புத்தாண்டை முன்னிட்டு வெளியாக உள்ளது என அறிவித்திருந்தது. அதற்காக தளபதி ரசிக்கர்கள் காத்திருக்கின்றனர். டிவிட்டரில் தற்போதே ட்ரெண்டிங்கில் டாப்பில் தளபதி 64 பற்றிய ஹேஸ்டேக் தான் காணப்படுகிறது.