கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெங்குயின் படத்தின் டீசர் பிரபல நடிகைகளான திரிஷா, மஞ்சு வாரியர், டாப்சி மற்றும் சமந்தா அவர்களால் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘பெங்குயின்’. ஹீரோயினுக்கு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண். இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஒடிடி பிளாட்பாரத்தில் வருகிற ஜீன் மாதம் 19ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த படத்தின் டிரைலரை வருகிற ஜீன் மாதம் 8ல் வெளியாகவுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை தென்னிந்திய சினிமாயுலகில் பிரபல நடிகைகளாக வலம் வரும் திரிஷா, சமந்தா, மஞ்சு வாரியர் மற்றும் டாப்சி அவர்களால் இன்று மதியம் 12 மணிக்கு வெளியிடப்படுவதாக கீர்த்தி சுரேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். போஸ்ட்ரை பார்த்த ரசிகர்கள் மத்தியில் பெங்குயின் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…