ஒரு அம்மாவின் கதையாக ‘பெங்குயின்’.! மிரட்டலான டீசர் இதோ.!
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள பெங்குயின் படத்தின் டீசர் பிரபல நடிகைகளான திரிஷா, மஞ்சு வாரியர், டாப்சி மற்றும் சமந்தா அவர்களால் இன்று வெளியிடப்பட்டது.
கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்திருக்கும் திரைப்படம் ‘பெங்குயின்’. ஹீரோயினுக்கு கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண். இந்த படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், லிங்கா உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஒடிடி பிளாட்பாரத்தில் வருகிற ஜீன் மாதம் 19ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த படத்தின் டிரைலரை வருகிற ஜீன் மாதம் 8ல் வெளியாகவுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அறிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசரை தென்னிந்திய சினிமாயுலகில் பிரபல நடிகைகளாக வலம் வரும் திரிஷா, சமந்தா, மஞ்சு வாரியர் மற்றும் டாப்சி அவர்களால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஒரு அம்மாவின் கதையை மையமாக கொண்ட பெங்குயின் படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
Here we go! A mother’s worst nightmare comes true. #PenguinOnPrime premieres June 19. @PrimeVideoIN⁰⁰ @EashvarKarthic @karthiksubbaraj @Music_Santhosh @KharthikD @Anilkrish88 @SaktheeArtDir @StonebenchFilms @PassionStudios_ @kaarthekeyens @sudhans2017 @SonyMusicSouth pic.twitter.com/FAWo8peRc1
— Keerthy Suresh (@KeerthyOfficial) June 8, 2020