பேனா சிலை – அதிகாரம் எங்கள் கைக்கு வரும்போது அதை உடைப்போம் – சீமான்
கடலில் தூக்கிவீசினாலும் கட்டுமரமாக மிதப்பேன் என்றார் கருணாநிதி. அப்படியானால் கட்டுமரம் வையுங்கள் என சீமான் பேச்சு.
நாகர்கோவிலில் சீமான் அவர்கள் சகோதரி மகளின் திருமண விழாவில் கலந்து கொண்டார். இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆளுங்கட்சி என்பதால் எளிதாகப் பணம் பட்டுவாடா செய்கிறார்கள். எங்களுக்கு அந்த அவசியம் இல்லை.
காங்கிரஸுடன் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என கமல் நினைக்கிறார். அது அவருடைய கொள்கை முடிவு. ஆனால் நான் தனியாகத்தான் நிற்பேன் என கொள்கைமுடிவு எடுத்திருக்கிறேன்.
ஏற்கெனவே கருணாநிதிக்கு சிலை வைத்திருக்கிறார்கள். கடலுக்குள் அரை ஏக்கர் நிலத்தில் பேனா சிலை வைக்கப்போகிறார்கள். அது அவரது எழுத்தையும், பேனாவையும் நினைவூட்டாதா? இல்லையென்றால் ஏன் சிலையை வைத்திருக்கிறீர்கள்.
அதுபோல மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் வைத்திருக்கிறார்கள், அது அவரை நினைவூட்டாதா… எதற்கு கடலுக்குள் 137 அடியில் சிலை வைக்க வேண்டும். இது வீண் விரையம்.
கடல் நாட்டுக்கு பொதுவானது. கடலில் தூக்கிவீசினாலும் கட்டுமரமாக மிதப்பேன் என்றார் கருணாநிதி. அப்படியானால் கட்டுமரம் வையுங்கள். ஏன் பேனா சிலை வைக்கிறீர்கள். மீறி வைத்தால் அதிகாரம் எங்கள் கைக்கு வரும்போது அதை உடைப்போம் என தெரிவித்துள்ளார்.