அதிர்ச்சி…பிரதமரின் செல்போனில் பெகாசஸ் ஸ்பைவேர்!

Default Image

இஸ்ரேலின் என்எஸ்ஓ(NSO) என்ற தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. குறிப்பாக,இந்த ஸ்பைவேர்,மொபைல் போன்கள் அல்லது பிற சாதனங்களுக்குள் ஊடுருவி உரிமையாளரின் அனுமதி இல்லாமல் தரவுகளை சேகரித்து உளவு பார்க்க முடியும் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில்,ஸ்பெயினின் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் தொலைபேசிகள் பெகாசஸ் ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.

அதன்படி,பிரதமர் பெட்ரோ சான்செஸின் மொபைல் போன் மே 2021 இல் இரண்டு முறை பெகாசஸ் ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டதாகவும், பாதுகாப்பு துறை அமைச்சர் மார்கரிட்டா ரோபிள்ஸின் மொபைல் போன் ஜூன் மாதம் பாதிக்கப்பட்டதாகவும் என்று ஸ்பெயின் ஜனாதிபதி மந்திரி பெலிக்ஸ் பொலானோஸ் நேற்று அவசரமாக கூட்டப்பட்ட செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.இதனையடுத்து,இந்த ஹேக் தொடர்பாக தேசிய நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்