இந்திய-சீன எல்லையில் அமைதி நிலவ நடவடிக்கை – சீன அரசு
இந்திய-சீன எல்லையில் அமைதி திரும்ப இரு நாடுகளும் நடவடிக்கை.
இந்தியா மற்றும் சீன எல்லையில் அமைதி நிலை ஏற்பட இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றது. ராணுவ தூதரக ரீதியான பேச்சுவார்த்தை நடைபெற்றது என தற்போது சீன அரசு தகவல் அளித்துள்ளது. எல்லையில் அமைதியை நிலையை கொண்டு வர இரு நாடுகளும் நடவடிக்கை எடுக்கும் என சீன அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவம் தங்களது படைகளை குவித்து வந்த நிலையில், அங்கு பதற்றம் நிலவியது. இந்த பதற்றத்தை தணிக்கும் விதமாக, இதற்க்கு முன்னே இந்தியா-சீனா இடையே ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை “மால்டோ” என்ற இடத்தில் நடந்தது.
அந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து இருநாட்டு ராணுவ அதிகாரிகள் இடையே உயர்மட்ட பேச்சுவார்த்தை நடந்தது. இந்நிலையில், அந்த பேச்சுவார்த்தையை அடுத்து, லடாக்கின் கல்வான் பகுதியிலிருந்து சீன ராணுவம் பின்வாங்கியது. மேலும், கல்வான் பகுதியிலிருந்து சீன ராணுவம், 2.5 கி.மீ. தொலைவில் முகாமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.