போர் பதற்றம் வேண்டாம்.. பாகிஸ்தான் – ஈரான் நாடுகள் இடையே சுமூக உடன்பாடு.! 

Pakistan Foreign Minister Jalil Abbas Jilani - Iranian Foreign Minister Hossein Amir-Abdollahian

பாகிஸ்தான் எல்லைக்கு உட்பட்ட பலுசிஸ்தான் பகுதியில் பல்வேறு தீவிரவாத கும்பல்கள் முகாமிட்டுள்ளன. இந்த தீவிரவாத கும்பலானது ஈரான் மீது அவ்வப்போது தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வந்துள்ளன. இதனால் கடந்த செவ்வாய் அன்று ஈரான் ராணுவம் பாகிஸ்தான் எல்லையில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவமும் ஈரானில், பாகிஸ்தானுக்கு எதிராக செயல்பட்டு வரும் தீவிரவாத இயக்க முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல்களில் பலர் உயிரிழந்தனர். இரு நாட்டு ராணுவமும் அண்டை நாடுகளுக்கு உட்பட்ட எல்லைகளில் நடத்திய தாக்குதல் சர்வதேச அளவில் இரு நாட்டு போர் பதற்றத்தை ஏற்படுத்தியது.

ஈரான் – பாகிஸ்தான் மோதல்.! உலக நாடுகள் கருத்து.!

இரு நாட்டு ராணுவமும் எதிரெதிர் நாட்டில் உள்ள தீவிரவாத முகாம்களையே தாக்கியதால் பெரிய அளவிலான போர் என்பது நடைபெறவில்லை.  இருந்தும் ஈரான் தலைநகர் தெஹ்ராவில் உள்ள பாகிஸ்தான் நாட்டு தூதரக அதிகாரியும், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஈரான் தூதரக அதிகாரி ஆகியோர் தங்கள் நாடுகளுக்கு செல்லும் அளவுக்கு பதற்றம் உருவானது.

இதனை அடுத்து, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் (ஐ.நா) சபை ஆகியவை ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தங்கள் நாடுகளுக்குள் நிலவும் போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தின. சீன அரசானது, ஈரான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே மத்தியஸ்தலம் செய்து வைக்க முன்வந்ததது.

இப்படியான சூழலில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஜலீல் அப்பாஸ் ஜிலானி மற்றும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோர் தங்களுக்குள் தொலைபேசி உரையாடலை மேற்கொண்டு, இரு நாடுகளுக்கும் இடையேயான போர் பதற்ற நிலைமையை தணிக்க வழி வகுத்து கொண்டனர்.

இஸ்லாமாபாத்தின் வெளியுறவு அமைச்சகம் இரு நாட்டு கூட்டு அறிக்கையை வெளியிட்டது, ‘ இரு நாட்டு போர் பதற்ற நிலைமையை தணிக்க மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு உள்ளிட்ட இரு நாட்டு ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்காக உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. சர்வதேச ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கான மரியாதைக்கான ஒத்துழைப்பை ஆதரிக்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தினார்.’ என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்