ஆஸ்திரேலியா அணியில் மீண்டும் பால் டேம்பரிங்கா ? அதிர்ந்து போன இந்திய அணி ரசிகர்கள்! ஆரோன் பின்ச் விளக்கம் !
நேற்று முன்தினம் நடந்த போட்டியில் இந்திய அணியுடன் , ஆஸ்திரேலியா அணி மோதியது.இப்போட்டியில் இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களான ரோஹித், ஷிகர் தவான் இருவரும் களமிறங்கி இவர்கள் கூட்டணியில் 127 ரன்கள் குவித்தனர்.அதனால் இந்திய அணி வெற்றி பெற பெரிதும் உதவியது.
மேலும் இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் சாம்பா செய்த சில காரியத்தால் ஆஸ்திரேலிய அணி பெரும் சர்ச்சையில் சிக்கியது. ஆடம் சாம்பா பந்துவீச தொடங்குவதற்கு முன் தனது பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டு தடவி கொண்டு இருந்தார்.
இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி இந்திய அணி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. ஆடம் சாம்பா அடிக்கடி பேண்ட் பாக்கெட்டில் கையை விட்டதால் அவர் பந்தை சேதப்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இது குறித்து கேப்டன் ஆரோன் பின்ச் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்து உள்ளார். “அந்தப் புகைப்படங்களை நான் பார்க்கவில்லை.மேலும் ஆடம் சாம்பா கையை உஷ்ணப்படுத்தும் வார்மரை என்ற பொருளை ஒவ்வொரு போட்டியிலும் பயன்படுத்துவது வழக்கம் தான் என கூறியுள்ளார்.
மேலும் கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக கூறி ஸ்மித், டேவிட் வார்னர் ஆகிய இருவருக்கும் ஓராண்டு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.