ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் கசிந்துள்ளது.
பதான் :
இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் தீபிகா படுகோன்,ஜான் ஆபிரகாம், அசுதோஷ் ராணா, டிம்பிள் கபாடியா ஆகியோர் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “பதான்”. ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த இந்த திரைப்படம் நேற்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
பதான் விமர்சனம் :
அதிரடி ஆக்ஷன்-த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் படம் மிகவும் அருமையாக இருப்பதாகவும், கண்டிப்பாக படத்தை திரையரங்கில் பார்க்கவேண்டும் எனவும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
பதான் வசூல்..?
பதான் திரைபடம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் வெளியாகி மிரள வைத்துள்ளது என்றே கூறலாம். அதன்படி, பதான் திரைப்படம் வெளியான 1 நாளில் உலகம் முழுவதும் 100 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வெளியான முதல் நாளில் 100 கோடி வசூல் செய்துள்ளது என்பது இந்தி திரையுலக வரலாற்றில் மிகப் பெரிய சாதனை எனவும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் சொல்கிறார்கள். வரும் நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட் பாட்ஷாவின் மாஸ் காம்பேக்
ஷாருக்கானின் திரைப்படம் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு பிறகு திரைக்கு வந்துள்ளது. எனவே அவர் ரசிகர்களின் 4 வருட காத்திருப்பை பூர்த்தி செய்து கம்பேக் கொடுப்பாரா என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், “பதான்” திரைப்படமும் அருமையாக இருப்பதாலும், படத்தின் வசூலும் முதல் நாளிலே சாதனை படைத்துள்ளதால் ஷாருக்கான் சூப்பரான காம்பேக் கொடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
மதுரை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம்.…
இஸ்ரேல்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானதால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடந்துவந்த போர்…
சென்னை: பிஎஸ்பி முன்னாள் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய ஆதரவாளராக கருதப்பட்டவர் ரவுடி பாம் சரவணன். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு…
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…