சவூதி அரேபியாவிற்கு வருகை தரும் பயணிகள் ஒருவாரம் தனிமைப்படுத்தப்படுவர்…! –
மே 20 முதல் சவுதி அரேபியாவுக்கு வரும் குடிமக்கள் ஒரு வாரத்திற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த, உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் சவூதி அரேபியாவில், விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படுகிறது.
இதனையடுத்து, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வண்ணம், மே 20 முதல் சவுதி அரேபியாவுக்கு வரும் குடிமக்கள் ஒரு வாரத்திற்கு அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று சவுதி சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
சவூதி குடிமக்கள் மற்றும் விமான பணியாளர்கள் தடுப்பூசி போடாவிட்டால், அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களை தனிமைப்படுத்தலில் தங்குவதற்கு சுற்றுலா அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விடுதிகளை விமான நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் தடுப்பூசி சான்றிதழை வழங்கினால் தனிமைப்படுத்த தேவையில்லை என்றும், 8 வயதுக்கு மேற்பட்ட சவுதி அல்லாத பயணிகள் 72 மணிநேரத்திற்கும் குறைவான எதிர்மறையான பி.சி.ஆர் கோவிட் -19 சோதனை முடிவைக் காட்ட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.