மூட நம்பிக்கையால் விமான இயந்திரத்தில் நாணயங்களை வீசிய பயணி – விமானத்தை ரத்து செய்த சீனா!
பாதுகாப்பாக பயணம் செய்ய முடியும் என அதிர்ஷ்டத்திற்க்காக விமான இயந்திரத்தில் 6 நாணயங்களை பயணி ஒருவர் வீசியதால் சீனாவின் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமான இயந்திரத்திற்குள் நாணயத்தை வீசுவதால் சென்றடைய வேண்டிய இடத்திற்குப் பாதுகாப்பாக சென்றடைய முடியும் எனவும், நல்ல அதிர்ஷ்டம் எனவும் நினைத்து பலர் தங்கள் மூடநம்பிக்கையால் இயந்திரத்திற்குள் நாணயங்களை வீசி விடுகின்றனர். இதனால் பல நேரங்களில் சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் தான் அதிகம் உள்ளது. ஆனால் மூட நம்பிக்கை கொண்ட மக்கள் பலரும் தொடர்ச்சியாக செய்து கொண்டுதான் இருக்கின்றனர். கிழக்கு சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் இருந்து தென் சீனாவின் ஹைனான் மாகாணத்தில் உள்ள குவாங்சி பெய்ப்பு வளைகுடாவிற்கு விமானம் புறப்படுவதற்கு தயாராக இருந்துள்ளது.
அப்பொழுது அந்த விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் விமானத்தின் இயந்திரத்தில் ஆறு நாணயங்களை வீசியுள்ளார். பாதுகாப்பாக செல்ல வேண்டுமென மூடநம்பிக்கையில் நாணயங்களை வீசிவிட்டு அங்கு நின்று பிரார்த்தனை செய்துள்ளார். உடனடியாக விமானத்தை ரத்து செய்துவிட்டு விமானத்தில் பயணிக்கும் 248 பயணிகளையும் கீழே இறக்கி விட்டுள்ளனர். மேலும் விமான இயந்திரத்துக்குள் நாணயத்தை வீசிய பயணியையும் போலீசார் தடுத்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர் இவரது மூட நம்பிக்கை காரணமாக தற்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன் அவருடன் சேர்த்து 148 பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.