விமானம் தரையிறங்கும் போது சீட் பெல்ட் அணிய சொல்லியதால் விமான பணிப்பெண்ணின் முகத்தில் குத்தி பல்லை உடைத்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாஷிங்டனில் தென்மேற்கு ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று சாக்ரமெண்டோவிலிருந்து சான்டியாகோ சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளது. அப்பொழுத விமானம் தரை இறங்க தயாராகும் போது விமான பணிப்பெண்பயணிகளிடம் விமானம் தரையிறங்குவதற்கு தயாராக உள்ளதால் பயணிகள் தங்கள் சீட் பெல்ட்டை அணிந்து கொள்ளுமாறு கூறியுள்ளார். அப்பொழுது விமானத்தில் இருந்து 28 வயது உடைய பெண் பயணி ஒருவர் பெண் விமான பணிப்பெண்ணின் முகத்தில் ஓங்கி குத்தியுள்ளார்.
தடுக்க முயன்ற மற்ற பெண்களையும் அந்த பெண் மிரட்டியதால், அனைவரும் அமைதியாக இருந்துள்ளனர். இருப்பினும் அருகில் இருந்த ஒரு பயணி இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் விமான பணிப்பெண்ணின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்தப் பெண் தனது இரண்டு பற்களை இழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதை அடுத்து பலரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த விமானம் சாண்டியாகோ சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் விமானப் பணிப்பெண்ணை தாக்கிய பெண்மணியை போலீசார் விமானத்தில் இருந்து வெளியேற்றி கைது செய்துள்ளனர். இதோ அந்த வீடியோ,
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…