நலத்திட்ட உதவிகளை தடுக்கும் கட்சி திமுக…முதல்வர் விமர்சனம்…!!
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவை தொடங்கி வைத்துவிட்டு மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் கள்ளிக்குடியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார்.
அப்போது தமிழக முதல்வர் கூறுகையில் , திமுக கட்சியினர் மக்களை பற்றி சிந்திக்க மாட்டார்கள். தங்களை மட்டும் சிந்திக்கும் கட்சி தான் திமுக. ஆனால் அதிமுக மக்களை பற்றி சிந்திக்கும் கட்சி , நான் உட்பட இங்கே இருக்கும் அனைவரும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர்கள்.எனவே எங்களுக்கு கிராம விவசாயிகள் படும் கஷ்டம் என்னவென்று தெரியும் . விவசாய தொழிலாளர்கள் பிரச்சனைகள் தெரியும் என்று பேசினார்.
மேலும் தமிழக முதல்வர் பேசுகையில் , பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசாக ரூபாய் 1000 வழங்கினோம் . அதை குறை கூறினார்கள் . அதோடு இல்லாமல் திமுக கட்சியினர் நீதிமன்றத்தில் வழக்கு போட்டு தடுத்தனர். ஏழைக மக்களுக்கு செய்யும் நலத்திட்ட உதவிகளை தடுக்கு கட்சி என்றால் அது திமுக கட்சி தான் என்று முதல்வர் விமர்சித்தார்.