வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையவிருந்த பிரபலம்.! பிக்பாஸிலிருந்து திடீர் விலகல் .!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைய உள்ளதாக கூறிய அஸீம் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 16 போட்டியாளர்களுடன் ஆரம்பித்து விறுவிறுப்பாக தற்போது 12 போட்டியாளர்களுடன் நடந்து வருகிறது . ஏற்கனவே வைல்ட் கார்ட் என்ட்ரியாக சுசித்ரா மற்றும் அர்ச்சனா நுழைய அதிலிருந்து சுசித்ரா வெளியேறி விட்டார் .
சண்டை , சச்சரவுகள்,அழுகை , சந்தோசம் என அனைத்து உணர்வுகளையும் பிரிதிபலிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த வைல்ட் கார்ட் என்ட்ரியாக சின்னத்திரை நடிகர் அஸீம் நுழைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.அதற்காக அவர் சென்னையில் உள்ள ஒரு ஓட்டலில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இதனிடையே திடீரென அஸீம் அவர்களின் தாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகவும் ,இதனால் அவர் ஓட்டலில் இருந்து வெளியேறி தாயாருடன் இருந்து இரண்டு நாட்கள் பார்த்து வந்ததாகவும், தாயார் குணமடைந்து வீடு திரும்பிய பின்னர் அஸீம் மீண்டும் ஓட்டலில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக கூறப்பட்டது .
இந்த நிலையில் தற்போது அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.அவர் பகிர்ந்த பதிவில் தனக்கு வந்த சில மன அழுத்தம் மற்றும் பிரச்சினை காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரவில்லை என்று கூறியுள்ளார்.மேலும் என் மீது காட்டிய அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என்றும், விரைவில் திரையில் காணலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.