வெளியாகியது பார்த்திபனின் இரவின் நிழல் டீசர் ..!
பார்த்திபன் தானே இயக்கி நடித்துள்ள புதிய திரைப்படம் தான் இரவின் நிழல். தமிழ் திரையுலகின் பிரபலமான நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் ஏற்கனவே ஒத்த செருப்பு எனும் படத்தை இயக்கி நடித்திருந்தார்.
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பார்த்திபன் அடுத்ததாக இரவின் நிழல் எனும் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் தொண்ணூற்று ஆறு நிமிடங்கள் கொண்டதாக உள்ளது.
மேலும், இப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட படம் எனும் உலக சாதனையையும் படைத்துள்ளது. இந்த படத்துக்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. மேலும் இந்த படத்தின் டீசரும் தற்பொழுது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. இதோ அந்த டீசர்,