உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. பசியால் வாடும் ஒரு சிலருக்கு பலர் உதவி செய்து வருகின்றனர். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சலூன் கடையை வைத்து வாழ்க்கையை நடத்தி வரும் மோகன், தனது மகளின் மேற்ப்படிப்பிற்காக கஷ்டப்பட்டு சம்பாதித்த 5 லட்சத்தை சேமித்து வைத்துள்ளார்.
அப்போது ஊரடங்கால் தனது பகுதியில் வசித்து வரும் மக்கள் பசியால் வாடுவதை கண்டு வருந்திய மோகன் மகளின் அனுமதியுடன் 6 ஆயிரம் தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவியுள்ளார்.
இதனை குறித்து அறிந்த நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது உதவியாளர் ஒருவரை அனுப்பி சலூன் கடைக்காரரின் குடும்பத்திற்கு பட்டு வேஷ்டி, சேலை கொடுத்து பெருமைப்படுத்தியுள்ளனர். மேலும் மோகனின் மகளின் மேற்ப்படிப்பிற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வேறு எந்த உதவியும் தன்னிடம் தயங்காமல் கேட்கலாம் என்றும் பார்த்திபன் கூறியுள்ளார். ஏழைகளுக்கு உதவினால் நமது உதவிக்கு கடவுளே வருவார் என்று கூறுவது பொய் இல்லை.
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …
டெல்லி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான மார்ச் 9ஆம்…
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…