அடித்தட்டு மக்களுக்கு உதவியாக இருக்கும் திட்டங்களை செயல்படுத்துங்கள். ஐடி போன்ற பெரு நிறுவனங்களுக்கு ஊரடங்கு விதியை தளர்த்த வேண்டாம் என பார்த்திபன் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. வரும் ஏப்ரல் 20ஆம் தேதி கட்டட தொழிலாளர்கள், பிளம்பிங், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக் வேலை செய்யபவர்கள் வேலைக்கு செல்லலாம் எனவும், குறிப்பிட்ட தொழிற்சாலைகள், கம்பெனிகள் பாதி ஆட்களை வைத்து இயக்கலாம் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு நடிகர் பார்த்திபன் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதாவது, ‘ தற்போதுள்ள ஊரடங்கை தளர்த்த வேண்டாம். வேண்டுமென்றால் அடித்தட்டு மக்களுக்கு உதவியாக இருக்கும் திட்டங்களை செயல்படுத்துங்கள். ஐடி போன்ற பெரு நிறுவனங்களுக்கு இந்த விதியை தளர்த்த வேண்டாம். ஏனென்றால் அங்கு 50 பேர் வேலைக்கு செல்கிறார்களா அல்லது 500 பேர் வேலைக்கு செல்கிறார்களா என கண்டறிவது கடினம்.
இன்னும் நாம் கொரோனா பரவுவதில்லை 3ம் கட்டத்திற்கு செல்லவில்லை. இந்த விதிகளை தளர்த்தி 3 கட்டத்திற்கு சென்றுவிட்டால், அமெரிக்காவை கூட காப்பாற்றி விடலாம் இந்தியாவை காப்பாற்றுவது கடினம். என கோரிக்கை விடுத்துள்ளார்.
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…