நடிகர் அஜித் குறித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்கள் கொண்ட நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். ரசிகர்கள் அவர் மீதுள்ள அன்பால் தல என்று அழைக்கின்றார்கள். இவர் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அஜித் குறித்து பலர் பெருமையாக புகழ்ந்து கூறுவது உண்டு அந்த வகையில், நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வந்தார். அப்போது ரசிகர்க ஒருவர் அஜித் அவர்களை பற்றி கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த பார்த்திபன் “ஜித்து போன்ற கதைகள் கெத்து போன்ற கதைகள் யோசித்தால் நண்பர் அஜித் ஞாபகம் வரும்…ரொம்ப பவர்புல்லான நடிகர் அவர்.. அவர் பெயரை சொல்லும்போதே அரங்கத்தில் விசில் மற்றும் கைதட்டல் சத்தம் நிற்க சில நிமிடங்கள் ஆகும்…நடிகைரை மீறி ஒரு ஸ்டாராக மாறுவது ஒரு சிலருக்கு மட்டுமே நடக்கும்..அது நண்பர் அஜித்திற்கு இருக்கிறது மகிழ்வான விசியம்.
நான் அவரை சந்தித்து பல வருடங்கள் ஆகிவிட்டது…நீ வருவா என படத்தின் போட்டோஷுட் காக மட்டும் தான் கைகொடுப்பது போன்ற விசியங்கள் நடந்தது.. ஒன்றாக நடிக்கும் காட்சி இல்லை.. அதன் பிறகு அவரை சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கல… ஒரு நல்ல கதை அமையும்..அதற்கான வாய்ப்பும் அமையும்.” என கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…