தமிழ் சினிமாவில் தனது வித்தியாசமான முயற்சிகள் மூலம் தமிழ் சினிமா கலைஞர்களின் வித்தியாசப்பட்டு நிற்கிறார் ராதாகிருஷ்ணன் பார்த்திபன். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஒத்த செருப்பு. இந்த திரைப்படத்தை அவரே எழுதி இயக்கி தயாரித்து இருந்தார். மேலும் அவர் மட்டுமே இப்படத்தில் நடித்திருந்தார்.
அந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. அதேபோல் திரையுலகினர் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றது. மேலும் இந்த படத்தை பல திரைப்பிரபலங்கள் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
ஒத்த செருப்பு படத்தை தொடர்ந்து அடுத்ததாக பார்த்திபன் ஒரே டேக்கில் அதாவது எந்தவித கட் செய்யாமலும் ஒரு முழுநீள படத்தை எடுக்க உள்ளாராம். இதற்கான முதல் கட்ட பணிகளில் களமிறங்கியுள்ளாராம். இந்த பட அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு இரவின் நிழல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…