ஜான்சன் கே இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் உருவாகும் “பாரிஸ் ஜெயராஜ்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
நடிகர் சந்தானம் நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பிஸ்கோத் . இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த நிலையில் சந்தானம் நடிக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
சந்தானம் அவர்களின் அடுத்த படத்தை ஜான்சன் கே இயக்குகிறார்.இவர் சந்தானம் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற “A1” படத்தின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பானது ஒரே கட்டமாக முடித்த படக்குழுவினர் இறுதி கட்ட பணியில் மும்முரமாக செயல்பட்டு வந்தனர் .தற்போது அதுவும் முடிவடைந்த நிலையில் சந்தானம் நடித்துள்ள அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
“பாரிஸ் ஜெயராஜ்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் கதாநாயகியாக அனைகா சோடி மற்றும் சாஷ்டி ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க மொட்டை ராஜேந்திரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் .மேலும் இன்று வெளியான பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்த திரைப்படம் ஜனவரியில் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…