கடந்த சில மாதங்களாக இலங்கை பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ளதால் உள்ளதால்,உணவு,எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை வானளவு உயர்ந்து உள்ளது.இதனால்,ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ வழியில்லாமல் திணறி வருகின்றனர்.மேலும், இலங்கை தமிழர்களில் சிலர் தமிழகத்தை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.அதே சமயம்,பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சே ஆகியோர்தான் காரணம் என்று கூறி அவரை பதவி விலக வேண்டும் என்று மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,இலங்கையில் நிலவும் அரசியல் மற்றும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்,துணை சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது.அப்போது,பிரதமர் மஹிந்த ராஜபக்சேவுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனை உறுதி செய்யும் விதமாக பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்ற அமர்வில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும்,சமகி ஜன பலவேகய(SJB) கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாச முன்னதாக தெரிவித்திருந்தார்.மேலும்,எதிர்க்கட்சி தலைவர் பிரேமதாச அவர்கள் ,கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சேவுக்கு எதிரான தீர்மானம் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மனாத்தில் கையொப்பமிட்டிருந்தார்.
இதனிடையே,பிரதமர் மஹிந்த ராஜபக்சே தலைமையிலான அரசாங்கத்திற்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெறுவதற்கு அரசாங்கத்தின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாக இருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP)நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்து உள்ளதாகவும்,இதனையடுத்து,பிரதி சபாநாயகர் பதவிக்கு திலான் பெரேராவை பரிந்துரைக்க ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) திட்டமிட்டுள்ளதாகவும்,அவரின் நியமனத்திற்கு பிரதான எதிர்க்கட்சியான SJB எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில்,இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்சேவும்,நிதி அமைச்சர் அலி சப்ரியும் நாடளுமன்றத்தில் சிறப்புரை நிகழ்த்தவுள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…