இன்று கூடும் நாடாளுமன்றம்.. இலங்கை துணை சபாநாயகர் ராஜினாமா ஏற்க மறுப்பு!

Default Image

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது.

இலங்கையில் நேற்று நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக துணை சபாநாயகர் ரஞ்சித் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், இலங்கையில் துணை சபாநாயகர் ரஞ்சித் ராஜினாமாவை ஏற்க அதிபர் கோட்டாபய ராஜபக்ச மறுப்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கூட்டம் நடப்பதால் துணை சபாநாயகரின் ராஜினாமாவை ஏற்க அதிபர் மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதனிடையே, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி, தற்போதைய அரசியல் சூழல் உள்ளிட்டவைகள் பற்றி ஆலோசிக்க நாடாளுமன்றத்தில் இன்றும், நாளையும் விவாதம் நடத்த சபாநாயகர் தலைமையில் நேற்று நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதன்படி, கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இன்று காலை 10 மணிக்கு இலங்கை நாடாளுமன்றம் கூடுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live rn ravi
Counterfeit 500 rupee note
Nagercoil Court - Killiyur MLA Rajesh Kumar
ma subramanian tn assembly
mk stalin - eps - tn assembly
Team India
Pope Francis