பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் ஆரஞ்சு பழ தோல்…!!!!
நாம் நமது பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமென்று செயற்கையான முறையில் கெமிக்கல்கள் சேர்க்கப்பட்ட பற்பசைகளை வாங்கி பயன்படுத்துகிறோம். ஆனால் இயற்கையான முறையில் பக்க விளைவுகள் இல்லாமலும் நமது பற்களை சுத்தம் செய்வதற்கான வழிமுறைகள் உள்ளது.
இரவில் படுக்கும் போது, ஆரஞ்சு தோலை கொண்டு பற்களை நன்கு தேய்த்துவிட்டு, வாயை அலசாமல் இரவு முழுவதும் ஊற வையுங்கள். அதில் உள்ள வைட்டமின் சத்தானது, வாயில் உள்ள கிருமிகள் கிருமிகள் மற்றும் நுண்ணுயிரிகளை அழித்து, பற்களை வலுவாகவும், வெள்ளையாகவும் வைத்துக் கொள்ளும்.