7 மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு காணாமல் போன தென்கொரிய சியோல் நகர மேயர் பார் வோன் சூன் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் ஆளும் இடது கட்சியை சேர்ந்த பார்க் வோன் சூன் கடந்த ஆண்டுகளாக 3 முறை சியோல் நகர மேயராக பணியாற்றி வந்தவர்.மேலும் தென்கொரிய அதிபர் தேர்தலுக்கு இவர் போட்டியிட அதிக வாய்ப்புகள் கணிக்கப்பட்டது.
இந்நிலையில் தனது தந்தையை காணவில்லை என்று பார்க்கின் மகள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ளமுடியவில்லை என்றும் போலீசில் அளித்தார். புகாரை அடுத்து 600க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
பார்க்கின் செல்போன் சிக்னல், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றின் உதவியோடு சுமார் 7 மணி நேரமாக நிலவி வந்த இந்த தேடலில் மேயர் பார்க் வோன் சூன் பற்றி தகவல் வெளிவந்தது.
தேடலில் சியோலின் வடக்கு பகுதியில் பார்க்கின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.மேலும் அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.உயிரிழந்த பார்க் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கடத்தி அவரை கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…