புட்டின் மெழுகு சிலையை அகற்றிய பாரிஸ் அருங்காட்சியகம்!

Default Image

உக்ரைனில்  ரஷ்யா 8-வது நாளாக போரை தீவிரப்படுத்தியுள்ளது. இந்த போரால் உக்ரைன் கடுமையான சேதங்களை சந்தித்து இருக்கிறது. உக்ரைன் மீது தாக்குதல் நடத்திய ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உலக நாடுகளின் பார்வையில் வில்லனாக மாறியுள்ளார். மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. புடினுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தினமும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. சிலர்  புடினை ’21 ஆம் நூற்றாண்டின் ஹிட்லர்’ என்று கூறுகின்றனர்.

இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் உள்ள கிரேவின் மியூசியமும் புடினை ஹிட்லருடன் ஒப்பிட்டுள்ளது. அங்கு புடினின் மெழுகு சிலை அகற்றப்பட்டது.  உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலால் இந்த முடிவை எடுத்ததாக அருங்காட்சியகத்தின் இயக்குனர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். கிரேவின் அருங்காட்சியகத்தின் இயக்குனர் கூறுகையில், ‘ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளை அருங்காட்சியகத்தில் நாங்கள் வைத்ததில்லை. இப்போது புட்டினையும் வைக்க மாட்டேம்  என்றார்.

அருங்காட்சியக வரலாற்றில் முதன்முறையாக தற்போது நடைபெற்று வரும் வரலாற்று நிகழ்வுகள் காரணமாக ஒரு சிலையை திரும்பப் பெறுகிறோம் என்று கூறினார்.

புடினுக்கு எதிராக போராட்டம் நடத்திய பள்ளி மாணவர்கள்  கைது:

புடினுக்கு உள்நாட்டில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. உக்ரைன் மீதான போருக்கு எதிராக போராட்டம் நடத்திய பள்ளி மாணவர்களும் ரஷ்ய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் 50 நகரங்களில் உக்ரைன் போருக்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்திய குற்றச்சாட்டின் பேரில் 7,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பல பள்ளி மாணவர்கள் உள்ளனர்.

மாஸ்கோவில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் பள்ளி மாணவர்களை போலீஸ் வேன்களில் ஏற்றிச் சென்று காவல் நிலையங்களில் வைத்திருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

புடினுக்கு பாடம் கற்பிப்பதாக பிடன் சபதம்:

உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ரஷிய அதிபருக்கு அமெரிக்க அதிபர் ஜோ பிடன் நேரடி சவால் விடுத்துள்ளார். ரஷ்ய அதிபர் புதினுக்கு பாடம் புகட்டுவேன் என்று உறுதியளித்துள்ளார். புடின் போன்ற சர்வாதிகாரிகள் மற்றொரு நாட்டை தாக்குவதற்கு விலை கொடுப்பார்கள். நாம் அனைவரும் ஒன்றாக உக்ரைனை ஆதரிக்க வேண்டும். ஒரு ரஷ்ய சர்வாதிகாரி மற்றொரு நாட்டைத் தாக்குவதன் அர்த்தம் முழு உலகிற்கும் என்ன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்