மாஸாக வசூல் சாதனை செய்யும் “பாரிஸ் ஜெயராஜ்”…10 நாட்களில் இத்தனை கோடி வசூலா..?

பாரிஸ் ஜெயராஜ் படம் வெளியான 10 நாட்களில் தமிழகத்தில் 6.15 கோடி வசூல் செய்துள்ளதாகவும், சென்னையில் 96 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி வெளியான திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். இயக்குனர் ஜான்சன் கே இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை அனைகா சோடி மற்றும் சாஷ்டி ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சிறந்த காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியான 10 நாட்களில் தமிழகத்தில் 6.15 கோடி வசூல் செய்துள்ளதாகவும், சென்னையில் 96 லட்சம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் சந்தானத்திற்கு இந்த திரைப்படம் ஒரு சிறந்த வெற்றி படமாக திகழ்கிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025