25 வது நாளாக வெற்றி நடை போட்டு வரும் பாரிஸ் ஜெயராஜ்..!
சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் திரைப்படம் 25 வது நாளாக வெற்றி நடை போட்டு வருகிறது.
நடிகர் சந்தானம் நடிப்பில் கடந்த 12ஆம் தேதி வெளியான திரைப்படம் பாரிஸ் ஜெயராஜ். இயக்குனர் ஜான்சன் கே இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடிகை அனைகா சோடி மற்றும் சாஷ்டி ராஜேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சிறந்த காமெடி படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வெளியாகி 25 வது நாளாக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது இதனால் 25 நாளாக வெற்றிகரமாக ஓடி வருவதால் சந்தானம் ரசிகர்கள் ட்வீட்டர் கொண்டாடி வருகிறார்கள். மேலும் 25 நாட்களில் இந்த திரைப்படம் 17 நாளிலே தமிழகத்தில் 8 கோடி வசூல் செய்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.