மனதில் நினைத்தவரை திருமணம் செய்ய இந்த பரிகாரத்தை செய்தால் போதும்..!
மனதில் நினைத்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ இந்த பரிகாரத்தை செய்து வாருங்கள்.
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பெரியவர்கள் கூறுவார்கள். முன்னோர்கள் அனைவரும் திருமண வாழ்க்கையை உயிர் போன்று மதித்தனர். தற்போதைய காலத்தில் ஆண், பெண் இருவரும் சம உரிமையில் வாழ்ந்து வருகின்றனர். ஆண், பெண் இருவரும் நன்கு புரிந்து பழகி வருகின்றனர். அவரவர்களது துணையை முடிவு செய்யும் உரிமையும் அவர்களுக்கு உண்டு.
அவ்வாறு ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து பழகி திருமணம் செய்ய நினைத்தால் அதனை பெற்றோரிடம் கூறி அவர்களது சம்மதத்துடன் செய்வது மகிழ்ச்சியை அளிக்கும். ஆனால், பலரும் பெற்றோரிடம் கூறுவதற்கு தயக்கம் கொள்கின்றனர். பெற்றோர் இதனை ஏற்றுக்கொள்வார்களா? இல்லை மறுத்துவிடுவார்களா? என்ற அச்சம் அவர்களுக்கு உண்டு. இதனால் இருவரும் திருமணம் செய்ய எவ்வித பிரச்சனையும் இல்லாமல் பெற்றோரின் சம்மதத்துடன் நிறைவேற இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
விரும்பியவரை கரம் பிடிக்க ஒன்றாக சேர்ந்திருக்கும் இரட்டை வாழைப்பழத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த வாழைப்பழத்தில் திருமணம் செய்ய நினைக்கும் ஆண், பெண் இருவரின் பெயரையும் எழுதிக்கொள்ளுங்கள். மனதில் விநாயகப்பெருமானை நன்கு வேண்டி கொண்டு, சங்கல்பம் செய்து கொள்ளுங்கள். இந்த நேரத்தில் விநாயகரிடம், மனதார விரும்பிய இருவரும் ஒன்றாக வாழ்வில் இணைய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள்.
இதனை அடுத்து இந்த வாழைப்பழத்தை பசு மாட்டிற்கு தானம் கொடுத்து விடுங்கள். இதே போன்று 9 முறை செய்து வந்தால் நீங்கள் யாரை திருமணம் செய்து கொள்ள நினைத்தீர்களோ அவரை திருமணம் செய்து கொள்ள முடியும். இந்த பரிகாரத்தை திருமணம் ஆன தம்பதிகள் சண்டையால் பிரிந்து இருந்தாலும், ஒன்றாக இணைய இதனை செய்யலாம்.