படுக்கையில் சிறுநீர் கழித்ததால் அடித்து கொன்று புதைத்த பெற்றோர்..!

- அமெரிக்காவில் 5 வயது சிறுவன் படுக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது உடையுடன் சேர்ந்து சிறுநீர் கழித்துள்ளார்.
- அதை பார்த்த பெற்றோர் அந்த சிறுவனை அடித்து உள்ளனர் .பலத்த காயம் அடைந்ததால் சிறுவன் இறந்து உள்ளார்.
- இதை தொடர்ந்து மகனின் உடலை புதைத்து விட்டனர்.
அமெரிக்காவை சேர்ந்தவர் ஆண்ட்ரூ .இவரது மனைவி ஜோயன். இவர்களின் 5 வயது மகன் ஏஜே. கடந்த ஏப்ரல் மாதம் ஏஜே வீட்டில் உள்ள படுக்கையில் உட்கார்ந்து கொண்டிருந்த போது உடையுடன் சேர்ந்து சிறுநீர் கழித்துள்ளார்.
இதை பார்த்த தாய் ஜோயன் கோபத்தில் அடித்து கொண்டு இருந்தார்.பின்னர் அங்கு வந்த தந்தை ஆண்ட்ரூ சேர்ந்து அடித்துள்ளார். இவர்கள் இருவரும் அடித்ததில் ஒரு கட்டத்தில் பலத்த காயமடைந்த சிறுவன் உயிரிழந்தார்.
இதையடுத்து ஆள் நடமாட்டம் இல்லாத போது இருவரும் சிறுவனின் உடலை புதைத்து உள்ளனர். இதை தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் இருவரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் தாய் ஜோயன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அவருக்கு 20 ஆண்டு முதல் 60 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அடுத்த மாதம் ஜோயன் தண்டனை அறிவிக்கப்படும் அதே நேரத்தில் ஆண்ட்ரூ மீதான வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024