வெயில்காலம் தொடங்கியாச்சு…! பெற்றோர்களே உங்க குழந்தைகளை சரும பிரச்சனையில் இருந்து பாதுகாக்க சூப்பர் டிப்ஸ்…!

Default Image

கோடைகாலத்தில் குழந்தைகளை சரும பிரச்சனையில் இருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும். 

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால் குழந்தைகளை மிகவும் கவனமாக கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். பெரியவர்களால் கூட வெப்பத்தின் தாக்கத்தை தாங்க இயலாத போது மென்மையான குழந்தைகளின் தோல் வெப்பத்தை தாங்கும் சக்தி உடையதாக இராது. எனவே குழந்தைகளின் உடலில் வெப்பத்தின் காரணமாக தடிப்புகள் மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

இதனை தடுக்க நாம் செயற்கையான முறையில் மருந்தகங்களில் பணத்தை செலவு செய்து கெமிக்கல் நிறைந்த க்ரீம்களை வாங்கி பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் குழந்தைகளின் சரும பிரச்சனைகளை தடுப்பதற்கான என்ன வழி உள்ளது என்பது பற்றி பார்ப்போம். தற்போது இந்த பதிவில் கோடை காலத்தில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய தோல் பிரச்சனைகளை சரி செய்ய கூடிய வீட்டு வைத்தியங்கள் பற்றி பார்ப்போம்.

கற்றாழை

கற்றாழை ஆன்டிஆக்சிடன்ட் பண்புகளை கொண்டிருப்பதால், இது சருமத்திற்கு இனிமையான உணர்வை தரக்கூடிய ஒன்று. கற்றாழை கூழ் எடுத்து, சருமத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பூசி பின் கழுவ வேண்டும். இது, அலர்ஜி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு உள்ளடக்கத்தை கொண்டுள்ளது. எனவே, இது தடிப்புகள் மற்றும் வெயில் தீக்காயங்களை தடுக்க உதவுகிறது.

தர்பூசணி

தர்பூசணி கோடைக்கால பழங்களில் ஒன்று. தர்பூசணி ஒரு சிறந்த குளிரூட்டும் மற்றும் இனிமையான பண்புகளை கொண்ட ஒரு பழம் ஆகும். இது வெப்பத்தால் தோலில் ஏற்படக்கூடிய வெடிப்புகளை சமாளிக்க உதவுகிறது. தர்பூசணி ஒரு துண்டை எடுத்து சாறு பிழிந்து, அதனை அதிலுள்ள அதன் விதைகளை ஒதுக்கிவிட்டு சருமத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தடவி சுமார் 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

சந்தனம்

சந்தனம் ஒரு இயற்கையான குளிரூட்டி ஆகும். இது வெப்பத்தால் ஏற்படக்கூடிய தடிப்புக்கு ஒரு சிறந்த சிகிச்சையளிக்கும் பொருளாகும். ஒரு பாத்திரத்தில் 2 தேக்கரண்டி சந்தனப் பொடி எடுத்து, அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் போல் தயார் செய்யவேண்டும். பின் அதனை பாதிக்கப்பட்ட பகுதியில் பூசி, நிமிடங்கள் 30 முதல் 40 நிமிடங்கள் வரை விட்டு பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

வேப்பிலை + மஞ்சள்

வேப்ப இலை பொதுவாக அனைவருக்குமே கிடைக்கக்கூடிய ஒன்று. வேம்பு மற்றும் மஞ்சள் ஆகியவை மருத்துவ குணங்கள் நிறைந்தவை. வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு சக்தி உள்ளது. இது அதிக அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. வேப்பிலைகளை எடுத்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து அதில் 2 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் சருமத்தில் உள்ள வெப்பத்தால் ஏற்படக்கூடிய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய் அற்புதமான குளிரூட்டும் பண்புகளைக் கொண்ட ஒன்றாகும். இது கோடை காலங்களில் ஏற்படக்கூடிய தடிப்புகள் மற்றும் அரிப்பு போன்ற சரும பிரச்சனைகளுக்கு விரைவான நிவாரணம் அளிக்கக்கூடியது. வெட்டப்பட்ட வெள்ளரிக்காய் அல்லது தோலை நேரடியாக பயன்படுத்தலாம். வெள்ளரிக்காய் சாற்றை வடிகட்டி அதனை சருமத்தில் தடவி, பின் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் வெப்பத்தால் ஏற்படக்கூடிய சரும பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்