கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நடிகை தமன்னாவின் பெற்றோர்.!
நடிகை தமன்னாவின் பெற்றோர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அதில் அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர். அந்த வகையில் தற்போது நடிகை தமன்னாவின் பெற்றோர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார்.
அதில் வார இறுதியில் தனது பெற்றோர் கொரோனாவுக்கான லேசான அறிகுறிகள் தென்ப்பட்டதாகவும், உடனடியாக வீட்டில் உள்ள அனைவருமே கொரோனாவுக்கான பரிசோதனையை மேற்கொண்டதாகவும், அதில் தனது பெற்றோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், நானும், வீட்டில் உள்ள மற்ற உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். எனவே உங்கள் பிரார்த்தனைகளும், ஆசீர்வாதமும் அவர்களை மீட்க உதவும் என்றும் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதிலிருந்து தமன்னா தனது மும்பை வீட்டில் தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது ரசிகர்கள் பலர் அவரது பெற்றோர் மீண்டு வர வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) August 26, 2020