5 வயது சிறுவனின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட 123 காந்தாமணிகள்.
சீனாவில், 12 வயது சிறுமி மற்றும் 5 வயது சிறுவனை வீட்டில் தனியாக விட்டுவிட்டு பெற்றோர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். இருவரும் டிவி நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த நிகழ்ச்சியில் மூழ்கி போன அந்த சிறுவன், தான் விளையாட்டு பொம்மையில் உள்ள காந்தமணிகளை எடுத்து ஒவ்வொன்றாக விழுங்கியுள்ளான்.
இதனையடுத்து, வேலை முடிந்து மாலையில் வீடு திரும்பிய பெற்றோரிடம், விளையாட்டு பொம்மையில் இருந்த பந்தை தான் விழுங்கியதாக அவர்களிடம் கூறியுள்ளான். இதனையடுத்து, பெற்றோர்கள் சிறுவனை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிறுவனை அபரிசோதித்த மருத்துவர்கள், பந்துகள் 5 நாட்களில் தானாக வெளியே வந்துவிடும் எனக் கூறியுள்ளார். ஆனால், 5 நாட்கள் ஆகியும் பந்துகள் வெளியே வராத நிலையில், சிறுவனை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கே சிறுவனுக்கு எக்ஸ்ட்-ரே எடுத்து பார்த்ததில் சிறுவனின் உடலில், ஏராளமான பந்து உருண்டைகள் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 4 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின், சிறுவனின் உடலில் 123 காந்தமணிகள் அகற்றப்பட்டது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…