" பராசக்தி எக்ஸ்பிரஸ் " தாஹிரின் ஓட்டத்தை இப்படியா பண்றது!வைரலாகும் வீடியோ !
நடப்பு உலக கோப்பையில் மிகவும் கவலைக்கிடமாக உள்ள அணிகளில் ஒன்றாக இருப்பது தென்னாபிரிக்க அணி விளையாடிய ஏழு போட்டிகளிலும் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று , 5 போட்டியில் தோல்வி அடைந்து ஒரு போட்டி ரத்தாகி மூன்று புள்ளிகளை மட்டுமே பெற்று உள்ளது.
இந்நிலையில் கடந்த 23-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக தென்னாபிரிக்க அணி லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. போட்டியில் பாகிஸ்தான் அணி 49 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இப்போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் பந்து வீச்சாளர்கள் தாஹிர் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தியதும் வழக்கம்போல மைதானத்தை சுற்றி ஓடி வந்தார். இதனை ரசிகர் ஒருவர் தன் ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டார் அந்த வீடியோவில் தாஹிர் உலகத்தை சுற்றி வருவது போன்று வீடியோவை அமைத்து செய்துள்ளனர்.
மேலும் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் தாஹிருக்கு ரசிகர்கள் மத்தியில் “பராசக்தி எக்ஸ்பிரஸ்” என்று பெயர் வைத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
The one and only Imran Tahir #CWC19 pic.twitter.com/CFRBDQMZnR
— Saj Sadiq (@SajSadiqCricket) June 25, 2019