பாபநாசம்-2 கமலின்றி உருவாகாது -நடிகை ஸ்ரீபிரியா உறுதி.!

கமல்ஹாசன் நடித்தால் மட்டுமே பாபநாசம்-2 படம் உருவாகும் என்று ஸ்ரீபிரியா கூறியுள்ளார்.
ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் திரிஷ்யம் . அந்த திரைப்படம் தமிழில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்காகி அங்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .அதில் கமல்ஹாசன், கௌதமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் மலையாளத்தில் திரிஷ்யம் படத்தின் இரண்டாம் பாகமும் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சாதனை படைத்து வருகிறது.அதன் பின் தற்போது திர்ஷ்யம் -2 படத்தினை தெலுங்கில் ஜீத்து ஜோசப் ரீமேக் செய்து வருகிறார்.அதற்கான ஆரம்பகட்ட பணிகளும் நடந்து வருவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.இதன் ரீமேக் உரிமையை நடிகை ஸ்ரீபிரியா வாங்கி தயாரித்து வருகிறார்.
அவரே தமிழ் ரீமேக் உரிமையையும் கைப்பற்றி உள்ளார் .இந்த நிலையில் பாபநாசம்-2 படத்தினை குறித்து அவர் கூறிய போது கமல்ஹாசன் நடித்தால் மட்டுமே பாபநாசம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என்று ஸ்ரீபிரியா உறுதியாக கூறியுள்ளார்.மேலும் கமல்ஹாசன் தேர்தல் பணிகளை முடித்து விட்டு பாபநாசம்-2 படத்தினை குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் ,கமலை தவிர பிற நடிகர், நடிகைகளை இயக்குனர் தேர்வு செய்வார் என்றும் ஸ்ரீபிரியா கூறியுள்ளார்.