பானிபூரி அதிகம் சாப்பிடுவோரா நீங்கள் அப்ப இதை மறக்காம படிங்க..!

Default Image

 

உடலில் குளுக்கோஸ் ஏற்றிக்கொள்வதற்காக சிற்றுண்டி உண்பது நம்மில் பலரது வாடிக்கை. வீடுகளிலேயே இனிப்பு, காரம் செய்து சாப்பிட்ட காலமெல்லாம் மலையேறிப்போக, தெருவுக்குத் தெரு பானிபூரி, சில்லி சிக்கன் கடைகள் முளைத்து விற்பனையில் அசுர வளர்ச்சி கண்டிருக்கின்றன.

சுற்றுச்சூழலே சுகாதாரமற்று இருக்கிறது. பூரியை பெருவிரலால் உடைத்து அதனுள் மசாலாவைத் திணித்து புதினா நீரில் முக்கி எடுக்கின்றனர். கை பெருவிரல் நகத்தில் படிந்திருக்கும் அழுக்கு பானிபூரியிலும் ஒட்டிக்கொள்ளும். பானிபூரி சுடுவதற்கான மாவை காலில் மிதிக்கிற புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது. அது மட்டுமல்ல… சாலையோர தள்ளுவண்டிக்கடைகளில் பானிபூரி விற்கப்படுகிறது. சில கடைகள் சாக்கடைக்கு அருகிலேயே இருக்கின்றன. இப்படியாக சுகாதாரக் குறைபாடுள்ள பானி பூரியை சாப்பிடும் நமக்கு என்ன ஆகும் என்பதை பார்க்கலாம்.

* எண்ணெயை ஒருமுறைதான் கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும். நடைமுறையிலோ எண்ணெயை மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்துப் பயன்படுத்துகிறார்கள். ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தும்போது அந்த கெட்ட எண்ணெய் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

* பூரியை கையால் உடைத்து, தண்ணீரில் முக்கிக் கொடுக்கும் போது அவரது கை எந்த அளவு சுத்தமாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். புழுக்கள் கைகளில் இருந்துதான் பரவுகின்றன. அதைச் சாப்பிடும்போது வயிற்றில் இப்புழுக்கள் உற்பத்தியாவதற்கான வாய்ப்புகள் அதிகம். கைகளில் பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்படலாம். வைரஸ் மூலம் பரவும் ‘ஹெபடைடிஸ் ஏ’ ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது.

* புதினா ரசம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால் அது பலவிதமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். எனவே தெருவோரக் கடைகளில் விற்கப்படுகிற, சுகாதாரத்துக்கு உத்தரவாதமில்லாத இத்தகைய உணவுகளைத் தவிர்ப்பது அவசியம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்