பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் ,பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும்.சிவபெருமானை கல்யாண சுந்திரமூர்த்தியாக அனுஷ்டிக்கும் விரதமாகும்.மேலும் இதனை திருமண விரதம் என்று கூறுவர்.
மேலும் இவ்விரதத்தை முருகனுக்குரிய விரதங்களில் ஒன்றாகும். மேலும் சாஸ்தா,சிவன்,விஷ்ணு ஆகிய தெய்வங்களுக்குரிய நாளாகவும் இந்நாள் விளங்குகிறது.இந்த தினத்தில் தான் இந்திரன் மகளான தெய்வாணையை பங்குனி உத்திரத்தில் முருகன் கரம் பிடித்தார்.
இந்நிகழ்வினை 2ம் படைவீடான திருப்பங்குன்றத்தில் பிரம்மோற்சவமாக கொண்டாடப்படும்.ஆனால் நடப்பாண்டு ஊரடங்கு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.தர்ம சாஸ்தா என்று அழைக்கப்படும் அய்யன் ஐயப்பன் அவதரித்த நாள் இன்றாகும்.
அதனோடு மட்டுமன்றி பார்வதி தன் மனதில் சிவபெருமானை மணக்கோலத்தில் தவம் இருந்து தியானித்து பரம்பொருளை கரம் பிடித்த நாள் இன்றைய நாள்.அதே போல் லட்சுமி கல்யாணம் நடந்து இத்தினத்தில் தான். இத்தகைய அற்புத சிறப்பு பெற்ற இந்நாளே திருமண நாள் என்று அழைப்பர் என்று முன்னேரே கூறியிருந்தோம்.
இந்நாளில் உத்திர விரதம் இருப்பதால் அனைத்து தெய்வங்களின் அருளும் கிடைக்கும் என்பது ஜதீகம் மேலும் திருமண தடை நீங்கி..விரைவில் திருமணம் குறித்த சுப செய்தி நடைபெறும் இது இன்றாளவும் இவ்விரதத்தை மேற்கொள்பவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருந்து வருகிறது.
விரதம் எவ்வாறு இருக்கலாம்?
காலையில் எழுந்து நீராடி; விரதத்தை துவங்க வேண்டும். பகலில் ஒரு வேளை மட்டும் உணவு உண்ண வேண்டும்.உண்ண இயலாதவர்கள் பால்,பழம், உண்ணலாம்.அந்தி சாயும் பொழுதில் அதாவது மாலை நேரத்தில் முருகன்,சிவன்,விஷ்ணு, ஆகியோர்க்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
பலன்கள்: திருமணத்தடை அகலும்; செல்வ செழிப்பு உண்டாகும், கல்வியில் மேன்மை; ஞானம் பெறுவர்; தொடர்ந்து 48 வருடங்கள் விரதம் இருந்து வரும் அடியவர்கள் முக்தி அடைவர் என்று விரத நூல்கள் கூறுகிறது.
கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…
சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…
சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…
பீகார் : இன்று பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…
சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான், திமுக…
கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…