பஞ்ச்ஷிர் மாகாணம் எங்கள் வசம் – தலிபான்கள் அறிவிப்பு!

Default Image

ஆப்கானிஸ்தானின் கடைசி மாகாணமான பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்றியதாக தலிபான் அமைப்பினர் அறிவிப்பு. 

ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருந்த தலைநகர் காபூலுக்கு வடக்கே உள்ள பஞ்ச்ஷிர் மாகாணத்தையும் நேற்று கைப்பற்றியதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். காபூலில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வெற்றி கொண்டாடத்தில் ஈடுபட்டனர். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால், ஆப்கானிஸ்தான் முழுவதையும் நாங்கள் கைப்பற்றியுள்ளோம். பிரச்சனையாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர் மற்றும் பஞ்ச்ஷிர் இப்போது எங்கள் வசம் உள்ளது என்று தலிபான் தளபதி கூறினார்.

எதிர்க்கட்சிப் படைகளின் தலைவர்களில் ஒருவரான முன்னாள் துணைத் தலைவர் அம்ருல்லா சலே, தனது தரப்பை விட்டுக்கொடுக்கவில்லை என்றார். நாங்கள் ஒரு கடினமான சூழ்நிலையில் இருக்கிறோம் என்பதில் சந்தேகமில்லை என்றும் நாங்கள் தாலிபான்களின் ஆக்கிரமிப்பில் உள்ளோம் எனவும் தெரிவித்தார்.

பல எதிர்ப்புத் தலைவர்களும் பஞ்ச்ஷிர் மாகாணம் தலிபான்கள் கைப்பற்றிய செய்திகளை நிராகரித்தனர். பஞ்ச்ஷிர் வெற்றி பற்றிய செய்திகள் பாகிஸ்தான் ஊடகங்களில் பரவி வருகின்றன. இது பொய் என்று படைகளை வழிநடத்தும் அஹ்மத் மசூத் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ஆகஸ்ட் 15 தாலிபான்கள் காபூலைக் கைப்பற்றி, ஆப்கானிஸ்தான் முழுவதும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் இருந்த அமெரிக்க படை முழுவதும் வெளியேறிவிட்டதால், ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தங்கள் வசப்படுத்தியுள்ளனர்.

இந்த சூழலில் ஆப்கானிஸ்தானில் விரைவில் புதிய ஆட்சியை அமைக்க தலிபான்கள் தீவிரக்காட்டி வருகின்றனர். எப்படிப்பட்ட ஆட்சி அமைய போகுது என்று உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்