இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிகை பூஜா ஹேக்டே நடித்துள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகிறது.
இந்த படத்தில் இடம்பெற்ற அரபிகுத்து பாடல் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி வெளியானது. வெளியான நாளிலிருந்து தற்போது வரை ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று பல கல்லூரி நிகழ்ச்சிகளில் பாடல் ஒளிபரப்ப செய்யப்பட்டு மாணவர்கள் நடனம் செய்து வீடியோ வெளியிட்டு வருகிறார்கள்.
இவர்களை போல பிரபல பல நடிகர்கள், நடிகைகள் அரபிக்குத்து பாடலுக்கு நடனம் செய்து வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள். இந்த நிலையில், தற்போது இந்த பாடல் யூடியூபில் வேகமாக 150 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் ட்வீட்டரில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத் மற்றும் பாடகி ஜோனிட்டா காந்தி இருவரும் இணைந்து பாடியுள்ளனர். விரைவில் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில்…
துபாய் : நேற்று இந்திய கிரிக்கெட் அணி, கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் 2வது ஐசிசி கோப்பையை கைப்பற்றியது. 2025…
துபாய் : துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை நான்கு…
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில் கலந்து கொண்டு மத்திய கல்வி…
டெல்லி : இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்கியது. இதில்…
ஸ்ரீவைகுண்டம் : தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பொதுத்தேர்வுக்கு சென்ற 11ஆம் வகுப்பு மாணவனை ஓடும் பஸ்ஸில் மர்ம கும்பல்…