பிரதமர் நரேந்திர மோடிக்கு பாலஸ்தீனத்தில்  சிவப்பு கம்பள வரவேற்பு !

Default Image

பிரதமர் நரேந்திர மோடிக்கு பாலஸ்தீனத்தில்  ,  சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேற்காசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு 4 நாள் அரசு முறை சுற்றுப் பயணமாக நேற்று ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் 2-ஆம் அப்துல்லாவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இன்று ஜோர்டானின் அம்மான் நகரில் இருந்து பாலஸ்தீனத்தின் ரமல்லா நகருக்கு, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி சென்றடைந்தார். அவருக்கு அங்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

Image result for modi in palestine ex pm

பின்னர் ரமல்லாவில் உள்ள யாசர் அராஃபத்தின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து, பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுநடத்த பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாசும், மோடியும் சந்தித்தபோது, பிரதமர் மோடிக்கு ஆபரணம் ஒன்றை அணிவித்த முகமது அப்பாஸ், நினைவுச் சான்றிதழ் ஒன்றையும் வழங்கினார். பின்னர் இருவரும் ஆரத்தழுவி தங்கள் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

இதையடுத்து, முகமது அப்பாசும், பிரதமர் மோடியும் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்