முதலவர் பழனிச்சாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கல் !

டாக்டர்.எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் சார்பில் வருகின்ற அக். 20ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்கப்படவுள்ளதாக அறிவிகப்பட்டது. இந்த அறிவிப்பை பல்கலைக் கழகத்தின் நிறுவனரும் முன்னாள் எம்.பி-யுமான ஏ.சி சண்முகம் அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கலந்துக் கொண்டார்.
பழனிச்சாமி உடன் இணைந்து டி.ஆர்.டி.ஓ தலைவர் ஜி.சதீஷ் ரெட்டி, கங்கா மருத்துவமனை தலைவர் எஸ்.ராஜசபாபதி, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகையும், பரத நாட்டிய கலைஞருமான ஷோபனா ஆகியோருக்கும் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025