கொடியேற்றத்துடன் தொடங்கியது..தைப்பூச திருவிழா…!பழனியில் அதிர்ந்த அரோகரா கோஷம்..கோலகலம்

Default Image
  • அரோகரா கோஷத்தில் அதிருந்த முருகனின் மூன்றாம் படை வீடு
  • கொடியோற்றத்துடன் தொடங்கியது தைப்பூசத்திருவிழா

அறுபடை வீடுகளில் அய்யப் முருகனின் 3ம் படைவீடாக திகழும் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 7 மணிக்கு எல்லாம் முதற்கடவுள் விநாயகர்க்கு பூஜை செய்யப்பட்டது, புண்ணியாக வாஜனம் மற்றும் மயூரையாகங்கள் நடைபெற்றது.  இதன் பின் கொடிப்படம் நான்கு ரதவீதிகளில் வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் மண்டபத்தில் முத்துக்குமாரசுவாமி வள்ளி தெய்வானைக்கு 16 வகை அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் சிறப்பாக நடந்தது.

இந்நிகழ்விற்கு பின் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை சமேதராக சப்பரத்தில் கொடிப்படத்துடன் கொடிகட்டு மண்டபத்திற்கு எழுந்தருளுகின்ற நிகழ்ச்சி நடைபெற்றது.  விநாயகர் பூஜையோடு  கொடிபூஜைக்கு  வாத்திய பூஜை நடந்தது.  கொடிப்படத்துக்கு தீபாராதனை காட்டப்பட்டு  கொடியேற்றம் நடைபெற்றது.

கொடியேற்றும் போது பக்தர்கள் ‘முருகனுக்கு அரோகரா’-‘கந்தனுக்கு அரோகரா’ பழனி ஆண்டிக்கு அரோகரா சரண கோஷங்களை  எழுப்பிய நிலையில் கொடிமரத்துக்கு விசேஷ பூஜைகள் நடந்தது.

பழனியில் தைப்பூசத்திருவிழாவானது 10 நாட்கள் நடைபெறும்இதனையொட்டி தினமும் காலையில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் தந்த பல்லக்கில் புறப்பாடு நடைபெறும் அதேபோல் இரவு 8.30 மணிக்கு மேல் புதுச்சேரி சப்பரம், வெள்ளி ஆட்டுக்கிடா, வெள்ளி காமதேனு, வெள்ளியானை, பெரியதங்கமயில் மற்றும் தங்கக்குதிரை ஆகிய வாகனங்களில் புறப்பாடும் சிறப்பாக நடைபெற உள்ளது.விழாவின் 10ந் திருநாளான  வரும் 11ந்தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியோடு இத்தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.தைப்பூசத்தை முன்னிட்டு மாலைபோட்டு பக்தர்கள் பாதையாத்திர மேற்கொண்டு அய்யனை காண பழனி நோக்கி விரைகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்