பழைய சோற்றின் பயன்கள்…!!!!
இன்று உலகமே நவீனமயமானதால் பழைய சோறு என்றால் என்ன என்று கேட்கும் அளவிற்கு ஆகிவிட்டது. ஆனால் இதனால் என்ன நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கும் என்பதை நாம் அறிவதில்லை.
பயன்கள் :
- உடலுக்கு நன்மை தரும் பாகாடீரியாக்கள் அபரிதமான அளவில் இதில் இருக்கின்றன.
- காலையில் இதை சாப்பிடுவதால், வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும்.
- உடலில் உள்ள அதிகமான உஷ்ணத்தை போக்கும்.
- இந்த உணவு, நார்ச்சத்து தன்மையையும் கொண்டிருப்பதால், மலச்சிக்கலை நீக்கும்.
- உடல் சோர்வை நீக்கும் தன்மை கொண்டது.
- இரத்த அழுத்தம் சீராகும்.
- உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்களுக்கு அதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கும் தன்மை கொண்டது.