இன்று வெளியாகும் அரண்மனை 3 பர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர்…!!
அரண்மனை 3 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அதனுடன் மோஷன் போஸ்டரும் இன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது.
சுந்தர் சி இயக்கத்தில் மிகவும் த்ரில்லாக இரண்டு பாகங்களாக வெளியான திரைப்படம் அரண்மனை. இந்த இரண்டு பாகங்களை தொடர்ந்து தற்போது இயக்குனர் சுந்தர் சி முன்றாவது பாகத்தையும் எடுத்துமுடித்துவிட்டார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த மூன்றாவது பாகத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் ராஷி கன்னா, ஆண்ட்ரியா,சாக்ஷி , விவேக்,யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
சமீபத்தில் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் அதனுடன் மோஷன் போஸ்டரும் இன்று காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.