பாபர் 1பி ஏவுகணையைச் செலுத்தி..!! பாகிஸ்தான் பரிசோதனை…!!!
பாகிஸ்தான் எழுநூறு கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் திறன்கொண்ட பாபர் ஏவுகணையைச் செலுத்திப் பரிசோதித்துள்ளது. புதிய தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட பாபர் 1பி என்னும் பெயர் கொண்ட இந்த ஏவுகணை தரை மற்றும் கடல் இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் பெற்றது. இந்த ஏவுகணையில் ஜிபிஎஸ் வசதி செயல்படாமல் போனாலும் கூடக் குறித்த இலக்கைத் தாக்கும் எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ள இந்த ஏவுகணை நேற்று வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்