பாகிஸ்தானை தெறிக்கவிட்ட இந்திய இளைஞர் அணி!கலக்கத்தில் பாகிஸ்தான் அணி……
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது.
ஐசிசி யு-19 உலக கோப்பை 2வது அரைஇறுதி போட்டியில் இந்தியா அணி பாகிஸ்தான் அணியை 203 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. கிறைஸ்ட்சர்ச் ஹேக்லி ஓவல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 272 ரன்கள் எடுத்து.
கிறிஸ்ட் சர்ச்சில் உள்ள ஹக்லே ஓவல் (Hagley Oval) மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. கேப்டன் பிரித்வி ஷா மற்றும் மனோஜ் கால்ரா ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 89 ரன்கள் குவித்து வலுவான துவக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஷுப்மான் கில் இந்த துவக்கத்தை பயன்படுத்திக் கொண்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்த அவர் 102 ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி தரப்பில் முகமது மூசா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசை மிக எளிதாக சரிந்தது.
அந்த அணியில் ஒரு வீரர் கூட 20 ரன்களை கடக்கவில்லை. 29.3 ஓவர்களில் அந்த அணி 69 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய தரப்பில் இஷான் போரேல் (Ishan Porel) அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளும், ஷிவ் சிங், ரியான் பராக் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும் வீழ்த்தினர். வரும் 3ம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள் ….