பாப்கார்ன் விற்று செக்கியூரிட்டி வேலை பார்த்து விமானம் தயாரித்த சாதனை மனிதர்!

Default Image

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த முகமது பயாஸ் என்பவர் சிறுவயதில் விமானப்படையில் சேர ஆர்வமுடன் கலந்துகொண்ட போது நிராகரிக்கப்பட்டார். பிறகு சொந்தமாக விமானம் தயாரிக்க முயற்சி மேற்கொண்டார். ஆனால் அவர் பார்த்து வந்தது பாகார்ன் வியாபாரம்.

இருந்தாலும் தனது முயற்சியை விடவில்லை. இவர் பகலில் பாப்கார்ன் வியாபாரம் செய்து வந்து இரவில், செக்கியூரிட்டி வேலை செய்தும் அதற்கான பணத்தை சேர்த்தார். விமானம் தயாரிப்பதற்காக யூ – டியூபில் வீடியோ பார்த்து அதற்காக வயலில் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தின் எஞ்சினை எடுத்து பொருத்தி, ஆட்டோ டயர்களை பொருத்தி விமானத்தை தயரித்து பறக்கவிட்டார்.

இதற்காக அவர் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவு செய்துள்ளார்.இதற்காக தனது சொந்த நிலத்தை விற்றும், பிறர்களிடம் கடன் வாங்கியும் செலவு செய்துள்ளார். ஆனால் இந்த விமானத்திற்காக அனுமதி பெறாததால் அவர்க்கு 3000 ருபாய் அபராதம் விதித்து விட்டது அரசு. இருந்தாலும் முறையான அனுமதிக்காக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். இந்த விமான விஞ்ஞானி!

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்