இந்தியாவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் பெண்கள்…வைரலாகும் ஹேஷ்டாக் …!!
- ஜம்முகாஷ்மீரில் உள்ள புல்மாவா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.
- இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் நாட்டின் பெண்கள் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில் 44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புல்வாமா மாவட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, பல்வேறு பாகிஸ்தான் நாட்டு பெண்கள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். இந்தியர்களின் துயரங்களை அவர்கள் பகிர்ந்து கொண்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அவர்கள் என்றைக்கும் “போர் என்றைக்கும் தீர்வல்ல” , “மனித நேயத்தை பாதுகாக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்றும் அழைப்பு விடுத்திருக்கின்றனர்.
Some Pakistanis have started #AntiHateChallenge to condemn the attack and to show solidarity with their Indian friends. pic.twitter.com/tUrhQ43dh6
— Tayyab Memon (@TayyabMemon) February 19, 2019
மேலும், இந்த தாக்குதலுக்கு எதிராகவும் , இந்தியாவிற்கு ஆதரவாகவும் #AntiHateChallenge, #WeStandWithIndia #NoToWar #CondemnPulwamaAttack என்ற ஹேஷ்டாக்குகளை ட்வீட்_டரில் பரப்பி வருகின்றனர். இந்த ஹேஷ்டாக்குகள் பாகிஸ்தான் நாட்டின் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன.